தொதூரக்கானல்
என் விழிநீர் துடைத்திடுமென நம்பிய உன் விரல்கள்
என் விழி கொத்திப்போகும் என்பதை நான்
அறியவில்லை பெண்ணே.........
உன் விரல்கள் தாங்கி இருப்பவை
அழகிய நகங்கள் அல்ல
கொடிய நாகங்கள் என்பதை
உணர்கிறேனடி உன்னால்........
உன் விஷமச்சிரிப்புகள் கூட
விஷங்கள் தாங்கிய அமுதங்கள் என்பதை
இப்போதுதான் உணர்ந்தேனடி...........
இதயத்தை இழந்தால் இருப்பதெல்லாம்
இழந்து விடுவேன் என்று
அப்போது நான் அறியவில்லை.......
இன்று !...
உனக்கு திருமணபரிசாக கொடுக்க
என்னிடம் எதுவும் இலையடி---ஏனெனில்
உனக்கே தெரியும் நான்
கொள்ளையடிக்கப்பட்ட வீடு--- ஆம்
உன்னால் கொள்ளையடிக்கப்பட்ட வீடு..............
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
