கண்டேன் தமிழ்ப்பெண்ணை

வானத்து வெள்ளி

அள்ளி பூ வனத்துக்குள்

துள்ளி வந்தது போல ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கண்டேன்

என் தமிழ்ப் பெண்ணை ,,,,,,,,,

நீல கடலுக்குள்

நீந்தாத ஆண் படகுக்கு

துடுப்பு எறிந்தது போல

கண்டேன்

என் தமிழ் பெண்ணை ,,,,,,,,,,,,,,,,,,,,,

அவள் கண்களில்

நாணம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தரையில் விழுந்த

நாணயம் ஆனது ,,,,,,,,,,,,,,,,,,,,,,

அவளின் உடையில்

அறுந்த நூல் கூட

வேதைனையில் இறந்து போனது ,,,,,,,,,,,,,,

அவளின் குரலில்

ஒலித்தது கற்க்காலமும்

பொற்காலமும் சுமந்த

நம் தமிழ் மொழியே ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


நான் கண் விழித்தேன்

விடிந்தது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

எழுதியவர் : DINESHBABU (3-Mar-12, 8:13 pm)
பார்வை : 344

மேலே