அற்புதம் செய்வோம்..!!

அற்புதம் செய்வோம்
கவி அற்புதம் செய்வோம்..!!
சொற்பதங்கள் பல சேர்த்து
சிறப்பான கவிகள் பல செய்வோம்
கருத்துவளம் மிகுந்திட்ட
கண்ணான கவிகள் பல படைப்போம்
வார்த்தைகளைக் கோர்த்து
வளமான கவிதைகள் பல செய்வோம்
எண்ணங்கள் பல சேர்த்து
வண்ணக் கவிதைகள் பல செய்வோம்
தமிழைப் போற்றி தமிழ்க்கொடி ஏற்றுவோம்
உலகையே நம் உன்னதத் தமிழ் ஆளட்டும்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (4-Mar-12, 12:57 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 216

மேலே