ஆறடி நிலம் எனதில்லையோ ,,,,,,,,

நான் துரத்திச் சென்ற

குருவி

இன்று மட்டும் ஏனோ

தொலை தூரம் பறக்கிறது,,,,,,,,,,,,,,,,,,,

நான் பிடிக்கச்சென்ற

மீன்கள்

இன்று மட்டும் ஏனோ

மாட்டிக்கொள்ள மறுக்கிறது,,,,,,,,,,,

குழம்பிய மனதிற்கு

புலம்பிய குரலில் என்

செவிக்கு எட்டிய செய்தி,,,,

நம் அகதி வாழ்கையில்

இனி இந்த சகதி கூட

சொந்தமில்லை என்பதே !

அக்கணம் என்

கண்களிடம் மண்டியிட்டது

என் மனம் -உன்

கண்ணீரை நிறுத்தாமல்

போனோமேயென்று ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

என் பாதத்தை சுடுகிறது

இந்த நிலம்

என் தாகத்திற்கு ஏன்

உன் குருதியை விடுகிறாய்யென்று,,,,,,,

சதிகாரன் கையில்

எங்களின் விதி

மாட்டிக் கொண்டதோ ,,,,,,,,,,,,,,,,என்றெண்ணி

கனவுகளை தொலைத்துவிட்டு

உறவுகளை நோக்கி

ஓடினேன் அகதியாக,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இப்படிக்கு

தினேஷ் பாபு

முற்றுப்புள்ளி வைக்க முடியாத என் தமிழ் இனத்தின் இது கவிதை அல்ல காயங்கள் ,,,,,,,,,,,,

எழுதியவர் : DINESHBABU (16-Mar-12, 11:08 am)
பார்வை : 306

மேலே