அன்பு மனம்

மணலை ஆழமாக
தோண்ட தோண்ட
நீர்தான் பொங்கி வரும் !

என்மனதை ஆழமாக
தோண்ட தோண்ட
பொங்கிவருவது குருதியல்ல
அன்பும், பாசமும் .!

வானில் இருக்கும்
மேகத்தை காற்று
பிரித்து விடுவது போல
என்மனதில் உள்ள
அன்பையும் பாசத்தையும்
பிரித்து விடுங்கள் என்கிறாய்
பிரித்து விடுவதற்கு என்ன
ஆற்றுநீரா ! ஓடை நீரா

அன்பில் என்ன
தற்பெருமை என்று
கேட்கிறீர்களா ?

"விழுந்து அடிபட்டவனக்கு
அல்லவா அதன் வலிதெறியும்" !

"பாசமுள்ள பார்வையிலே
கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்"
என்ன அழகாக பாடிச்சென்றார் கவிஞர் !

என்றும் அன்புடன் "நட்புக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (17-Mar-12, 11:16 am)
சேர்த்தது : sethuramalingam u
Tanglish : anbu manam
பார்வை : 445

மேலே