ஆசை
உன் உச்சி முதல் பாதம் வரை,
என் முத்தம் படாத இடமும் இல்லை..
உன்னை கட்டி அணைக்கும் போது,
என் மெய் சிலிர்க்கும் பாரு..
இரவினிலே நீ என்னுடன் விளையாடி,
உன் நககீறல்களை என்னுடல் பரிசாக வாங்கி..
தலையணைகள் பல இருந்தும்,
என் மீது நீ படுக்க..
என் இதய துடிப்பே, என் குழந்தைக்கு,
இந்த தந்தையின் தாலாட்டு....
- மயிலை பிரபு