"மாடபுற மாடா போறா"
பொண்ணு பாக்க வந்தவனுங்க
ஒன்னு ரெண்டு பேரு இல்ல
கருப்பு செவப்பு குட்ட நெட்ட
குனிஞ்சா தெரியும் பெரிய சொட்ட
எல்லாரும் அவள புடிக்கலன்னு
கொற போனாங்க....
இவனுங்க எல்லாம்
முடிவெட்ட போகையில
கண்ணாடி குருடாகி போயிடுச்சோ...?
வளந்து நிக்கிற வக்கனையா...
வச்சி தேக்கிரா வேளக்கேன்னைய.
இளமை கனவு வந்து வாட்டுது
இவளுக்கு வரணும் அமைய மாட்டுது
கடசியா ஒருத்த வர
கூடத்திலே அவ நின்னா;
கூடுதல் கொறங்கின்னு
அவள் அப்பன் கேட்க
இதுவே கொரச்சல்ன்னு
அவன் ஆத்த குத்த
வந்தது போயிடுமோனு
வளச்சி போட்டாங்க;
வேல படிஞ்சி வர
அவளும் மடிஞ்சி போனா
அந்த மாட்டு சந்தையிலே;
தாலிகட்டி ஒட்டி போனான்
இழத்த இழுப்புக்கெல்லாம்
நடக்கிறாள் ; கருகி போன
கனவு பிணங்களுடன் ;