கற்று கொண்ட பாடம்

காலம் முழுக்க படிக்கவேண்டிய பாடம்
உன்னிடத்தில் என் தோல்வி !!

என் அனுபவங்கள் எனக்கு நிறைய
கற்று கொடுத்திருக்கின்றன !
ஒரு சிலரை அடையாளம் காட்டியது
நண்பனாய் ! சகோதரனாய் !

என் எல்லைகளை வரையறுத்தது !
என் உடனிருப்போரை தோலுரித்துகாட்டியது !
மறந்திருந்த என் பலம் !

என் கண்ணீரின் சுவை !
அவமானங்களின் பதைபதைப்பு !
உன் ஏளன பார்வை ! நீ என்னை
நடத்திய விதம் ! அதை ஏற்க மறுத்த என்மனம் !

இவை அனைத்தும் நான் காலம் முழுக்க
படிக்க வேண்டிய பாடங்கள்!
அந்த பாடங்களும் என் வாழ்க்கையின்
வளர்ச்சிக்கு ஒருவழி பாதையே !
நன்றி நண்பா !

எழுதியவர் : VALARMATHIRAJ (3-Apr-12, 4:44 pm)
Tanglish : katru konda paadam
பார்வை : 276

மேலே