அறிவு கூறும் நட்பு !
தொப்புள்கொடி மூலமே சொந்தம் உருவாகுது
எந்தகொடி கொண்டுஇந்த நட்பு நம்மைநாடுது
வங்கிக்கணக்கு,பணயிருப்பு, வசதிவாய்ப்பு பார்த்துதான்,
அண்ணன்தம்பி அத்தைபொண்ணு அத்தனைபேரும்
உறவாடுது.
செப்புகொள்ளா தங்கத்திலே நகையுண்டா? சொல்லுநீயும்
உப்புஇல்லா பண்டமேதும் சுவைத்ததுண்டா? எந்தநாளும்
செப்பு, உப்பு இரண்டுமே கற்புபோலே உள்ளதுபோல்
நட்புஇல்லா வாழ்கையும் நரகம், ஊனம் ஆகுமே!
பத்தும்செய்யும் பணமென்றாலும் -ஒரு
உண்மைநட்பு விலைக்கில்லை!
ஒத்தவகுப்பில் சேர்ந்தநட்பு -உயிர்
உள்ளவரையில் மறைந்ததில்லை
விட்டுபோகும் எல்லாமும் -நாம்
தட்டுகேட்டு போகும்நாளில்
புத்திமட்டு ஆனபோது -தட்டி
அறிவு கூறும் நட்பு !