நீ என்னை விட்டு சென்ற பிறகு
5 நிமிடத்திற்கு ஒரு முறை நீ என்ன செய்கிறாய் என்று நினைத்தேன்,
அருகம்புல்லை போல என் முகத்தில் உள்ள தாடி இன்று ஆலமர விழுதாய் வளர்ந்தது
யாருமிலா திரையரங்கில் இருக்கையோடு,என் இருக்கைகளை இருகிகொண்டு அமர்ந்தேன் ,
சாலையில் விழிப்போடு செல்வதற்கு பதிலாக சற்றே சலிப்போடு நடந்து சென்றேன் ,;
கைபேசி நிறுவனம் அனுப்பும் குறுந்தகவலையும் வெகுநேரமாய் பார்கிறேன் ,
தினமும் கேட்கும் சுகமான பாடல்களும் இன்று சோகமாக மாறியது ..
ஒரு நாளில் 3 வேலைகளாக சென்ற உணவு , 3 நாட்களில் ஒரு வேலை தான் செல்கிறது,
நான் நகர்ந்த பொழுதிலும் நேரம் நகர மறுக்கிறது;
நான் நடக்கும் பொழுது என் நிழலாவது என்னை தொடர்கிறதா என்று தினமும் பார்கிறேன் ,,,
இவை அனைத்தும் நீ என்னை விட்டு சென்ற பிறகு நடந்தது ...........