தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ..!
யுகங்கள் சில கடந்தும்
இன்னமும் புரியாமல் காதல்...
ஆண்டுகள் பல கடந்தும்
இன்னமும் இளமையாக தமிழ்..!
என்னை மணந்தாள்...
உன்னை மணந்தாள்...
நம்மை மணந்தாள்...
ஆனாலும்
அவள் என்றும் கன்னி..!
ஏனெனில் அவளொரு கன்னித்தமிழ்...
வானின் நட்சத்திரங்கள் மொழிகளென்றால்
அவளோ வெண்ணிலவுக்கு இணை..!
ஏனெனில் அவளொரு இயற்றமிழ் ..!
எந்த துன்பமும் இன்பமாகும்
அவளை செவிமடுக்கும் போது ..!
ஏனெனில் அவளொரு இசைத்தமிழ் ...
முக்கனியின் சுவையை விட
அவளை உச்சரிப்பதிலே அப்படியொரு சுவை..!
ஏனெனில் அவளொரு நாடகத்தமிழ் ...
பிறமொழி காதலர்களைக் காட்டிலும்
தமிழ்மொழி காதலர்களுக்கு காதலொரு தவம் ..!
ஏனெனில் அவளொரு காதல்தமிழ் ...
இன்று சித்திரை திருநாள்..
எத்திக்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு
எம் உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ..!
என்றும் அன்புடன்,
அன்பு.இளமாறன்.