தண்டவாளம்

சமாந்தரமாய்ச் செல்லும்
சாரைப் பாம்புகள்

மனம்

வேண்டுவோரைக் குடியேற்றும்
வேண்டாதோரை வெளியேற்றும்
மாயைக் கிராமம்

மரங்கொத்தி

பெருமரத்து
சிறு தச்சன்

எழுதியவர் : நாஸிற் கலீபா பொத்துவில் (15-Apr-12, 8:04 pm)
பார்வை : 255

மேலே