பண்பாடு அது நாறிபோச்சு
நாடு ரொம்ப கேட்டு போச்சு
நல்லதெல்லாம் செத்துபோச்சு
நறுமணமாக இருந்த
பண்பாடு நாரிபோச்சு
கருவாட்டு கொழம்பு கூட
ருசியா தான் இருக்கும்
பண்பாட நினச்சாலே
வாந்தி வருது எனக்கு
பக்கத்துக்கு வீட்டு பொண்ண
கூட்டி கிட்டு ஓடுறான்
தன்னோட பொண்டாட்டிய
கலட்டி விட்டுட்டு போகுறான்
ஒன்னு இல்ல ரெண்டு இல்ல
ஏழு எட்டு ஆகி போச்சு
வப்பாட்டி இன்றி அவன்
வாழ்க்கை இல்லேன்னு ஆச்சு
தப்ப நான் சொல்ல வில்ல
செய்தித்தாளை எடுத்து பாரு
பண்பாடு நம் பண்பாடு
அது நாறிபோச்சு இன்று தான்
கண்பட்டு பலர் கண்பட்டு
அது நாறிபோச்சு இன்று தான்