இளங்காளைகளின் கவனத்திற்கு

கலகலப்பான காதலும் வேணாம்
கண்டாங்கி சீலை கட்டி
கலியாணமும் வேணாம்
எல்லாம் கைகூடி வர்ர நேரத்துல
பரபரப்பா சுழருர மண்டபத்துல
காவியும் கைதடியும் போதும்ன்னு
காசிக்கு போறேன்னு பிச்சை கேட்டு வாரான்
மாப்பிள்ளை கோவிச்சிகிட்டு போறான்

மச்சானும் சொல்லி பாக்குறான்
கெஞ்சியும் பாக்குறான் கடைசியா
குடையும் செருப்பும் குடுத்து மச்சா
அழைச்சி வாறான்
ஆரவாரத்தோடு மாப்பிள்ளையும்
சிரிச்சி வர்றான்
சர்வ மங்கல மாங்கல்யேன்னு
ஓதுவானும் ஓதுறான்
மத்தளத்த கொட்டுறான்
மத்தளத்த கொட்டுறான்

ஏனய்யா இந்த பொல்லாப்பு - மாப்பிள்ளை
தேவையா உனக்கு இந்த வீராப்பு
மாப்பிள்ளையாக போகும் காளைகளே
கொஞ்சம் நில்லுங்க பதில் சொல்லுங்க

குடும்ப விளக்கு குத்துவிளக்கோட வர்றா
அலங்கார மேடையிலே அம்சமா நிக்கிறா
சபையவருக்கும் வணக்கம் வச்சி
கெட்டி மேள சத்தத்துல மாப்பிளைக்கு
தலை குணியிரா குடும்ப பாரத்த
தாலியா வாங்கிக்குறா

அம்மி மிதிச்சி
அருந்ததியும் பார்த்து
அவள் கால் பிடிச்சி மிஞ்சி போடும்
கட்டழகர்களே.....

உமையவளையும் கொஞ்சம் பாருங்க
மாப்பிள்ளையாக போகும் காளைகளே
அவள் மனசையும் கொஞ்சம் கேளுங்க
ஊர் கூடி சீர்செனத்தோடு வந்த பொண்ணு
வாய் மூடி அடுக்கலையில வச்சிராதிங்க

மாப்பிள்ளையாக போகும் காளைகளே
மறுபடியும் காசிக்கு போறேன்னு
திரு ஓடு தூக்கிறாதிங்க -உங்க
திருமதிக்கு நல்ல வெகுமதியா இருங்க

எழுதியவர் : பிரகாஷ்சோனா (21-Apr-12, 9:09 pm)
பார்வை : 287

மேலே