கவிதை வாழ்க்கை....
உனக்கும், எனக்கும்
ஒரே மொழி என்றாலும்....
நீ படித்ததில்லை
எனது கவிதைகளை.
எனது மொழியில்
எந்தச் சிக்கலும்
இல்லை என்றாலும்
நீ வருட
ஆசைப்பட்டதே இல்லை
எனது கவிதையின் சிறகுகளை.
ஒரு மலையில் மோதி
எந்தப் பலனுமற்று திரும்பும்
ஒலியைப் போல ....
உன் கண்களை மோதித்
திரும்புகிறது...
என் கவிதையின் பக்கங்கள்.
கடைசிவரை-
நம் மொழி அறிந்தவனால்..
வாசிக்கப் படாமலேயே
கசங்கிவிடுகிறது...
எனது கவிதையும்.....
எனது கவிஞன் வாழ்க்கையும்.