ஆவாய் நீ மடாதிபதி!
நான் படித்ததை
அவர்கள் கேட்கவில்லை
அவர்கள் கேள்வி
எனக்கு புடிக்கவில்லை
தேர்வு முடிவை பார்த்து
தேவையில்லாமல்
அப்பா முறைக்கிறார்
அவருக்கு என்ன தெரியும்?
நம்மவூறு
சாமியாடிமகன்
படித்துவிட்டா
மடாதிபதியானார்?
ஆயிரம்கோடிகளுக்கு
அதிபதியானார்?
ஆரனங்குகளுடன்
அரியனையேறினார்?
(ஆமாம் தம்பி!
உன்னிடமும் தெரிகிறது
அதே கபட பல்யிளிப்பு
அதே தலை வளர்ப்பு
அதே காமுக நடிப்பு
ஆபத்தெனில் ஓடிஒழிப்பு
ஆபத்தான உபசரிப்பு
ஆனாலும் ஆவாய் நீ
இந்திய நாட்டின்
மிகப்பெரிய மடாதிபதி!
என் தந்தைக்கும் அறிவில்லை
என்னை படிக்க வைத்து
என்ன கண்டார் அவர்?
கண்டதை எழுதுவதை தவிர
கண்டதென்ன நானும்?)