வறண்ட பூமி

ஒத்த நெல்லு
வெதைக்க வழி இல்ல
மழை தண்ணி ஏதும்
கண்ணுல அகப்படல
பட்டினில சாவுது
வயல்ல காயிறவன் குடும்பம்
வாழ வச்ச பூமிய வித்துபுட்டு
பட்டணம் தேடி போக மனசில்ல
பொன்ன விளைஞ்ச மண்ணு
பொணமா கிடக்குதய்யா
மரங்கன்னு வளத்து
மழை தண்ணிய பெருக்குங்க
வறண்ட நிலமெல்லாம்
பச்சை பட்டு உடுத்தட்டும்