அசைவுகள்

ஒவ்வொருவரும் வெவ்வேறு
விதங்களில்
வெவ்வேறு ஸ்டைலில்
புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஆனால்..
எல்லோரும் அசையாமல்
கேமராவையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
பின்னால் இருந்த திரைச் சீலைகளும்
பூக்களும் அசைந்தன
செயற்கைக் காற்றில் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-Jun-12, 5:54 am)
பார்வை : 241

மேலே