வாழ்கை போராட்டமே!
வெற்றியை ருசிக்க
நித்தம் ஓடும்
மனிதனுக்கு!
வாழ்கை போராட்டமே!
பணம்,பதவி,பொருள்
என
குறிக்கோள் வேறாகினும்
ஓட்டம் ஒன்றுதான்!
ஓடி ஓடி களைத்தபின்
ஓய்ந்து உடக்காரும் போது
உணருகிறான்
இருப்பதே இன்பமென்று!
எது வெற்றி?
எது சந்தோசம்?
திக்குத்தெரியாமல் கடலில்
செல்லும் கப்பலுக்கு
கலங்கரைவிளக்கம்
வெற்றி!
பருந்துக்கு தப்பிய
பாம்புக்கும், பாம்புக்கு
தப்பிய எலிக்கும்
உயிர் பிழைத்தது சந்தோசமே!
இப்போது பசிக்கு சோறுயின்றி
வாடும் மனிதர்களிடையே
பிறக்காத தலைமுறைக்கு
சொத்து சேர்க்கிறோம்!
துரத்துகிறதே வாழ்கை
தொடர்ந்து ஓடுகிறோம்!
நடுஇரவில் முகப்புவிலக்கிலாமல்
மலைபாதையில் செல்லும் காரைப்போல
எதிர்வரும் இன்னல் தெரியாமல்
ஓட்டம் தொடர்கிறது!
தொடர்ந்து ஓடுவோம்!
வாழ்கை விட்டுச்செல்லும்
சிற்சில சந்தோசங்கள்
ஓடுவதற்கு உரமுட்டடும்!