வெற்றியின் வேறுமுகம்....(ஏறுமுகமல்ல)
வெற்றியின் போர்வையில்
வேற்றுமை கற்றேன்
இருக்கும்உறவுகளுக்கு இறுதிவணக்க மிட்டேன்
சூழும்இரு ளறியா நட்புகள்/உறவுகள் கொண்டேன்
பணமும், பாராட்டும் -
பாக்கியங்களென உரைப்பதைக்கேட்டு உள்ளத்தை விற்றேன்
வாழ்வின்துவக்கத்தில் கற்றஉண்மைகளை இன்று தூக்கிலிட்டேன்
காலச்சக்கரத்தில் ஏலக்கொள்ளிகளேதெனஅறியாது - அன்று
கரன்சியில் வாழ்க்கைக்கணக்குகளிட்டேன் - உடன் என்மகனுக்கும் கற்றுக்கொடுத்துவிட்டேன்
ஐயகோ! - இன்று காலச்சக்கரத்தில்,
புது கோலப்புள்ளிகளைநுழைத்து
கம்பிகளிழுக்க கழுத்தை நெரிக்கிறதே.......
என்னிடம்கற்ற என்மகனே
வீட்டில் இவ்வாறு உரைக்கிறான்.....,
இனி பணம்ஈட்டாத பயனற்றதந்தை யெதற்கு
நேரத்தை வீணடிக்கும்,
கடைசிகால தந்தைக்குபணிவிடை செய்வதெதற்கு
இனி இறக்கும்வரை காப்பதெதற்கு
இறுதிகாரியம், இறுதிஊர்வல மெதற்கு
இன்றைய நவீனயுகத்தில்,
ஓலமிடாத ஏலக்கொள்ளியிருக்க
நேரத்தை செலவிடாதுதவிர்க்க
இறுதிச்சடங்கில்,
பணத்தை நீர்போல் இறைக்காதுதவிர்க்க.....
ஏலக்கொள்ளிதானென அழுத்தி மகன்குரலிழுக்க.....
அதிர்ந்த தந்தையோ......
இருந்தஉறவுகளை எடுத்தெறிந்துஏசிய இதயமின்று தவிக்கிறதே
இதயத்தில் வெற்றிடம்வந்து அடைக்கிறதே
அன்று இதயமில்லாது பேசியதால்
இன்று என் உயிர் துடிக்கிறதே......
குறிப்பு 1:
ஏலக்கொள்ளி - இன்றைய நவீனயுகத்தில், அவசர காலத்தில், அறிமுகமான மின்சாதனமுறையில் உடலைமட்டும் பொசுக்கி சாம்பலாக்காது, மனிதஉணர்ச்சியைசேர்த்து சாகடிக்கும், மனிதன் படைத்த கருவி. இதுவும், பணம் ஈட்டத்தான் மனிதன் படைத்தான்; நவீனயுகத்தில், மனிதன், எதைத்தான் மனம் கூட்டப்படைத்தான்?????
ஏலக்கொள்ளி - தந்தைக்கு கொள்ளிவைக்கவும், இறந்த தந்தையை நினைத்து பார்க்கவும் நேரமில்லையாம். உடலை கொடுத்தவுடன், எவனோ ஒருவன் (யாருமில்லாத, அனாதைப்பிணமா?) Button-ஐ அழுத்துவானாம் , சில
நிமிடங்களிலோ (அ) நேரத்திலோ அஸ்தியை door delivery செய்துவிடுவார்களாம். கொடுமை.
குறிப்பு 2:
உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளவோ
வருத்தம் கொள்ளவோ
வருத்தம் தெரிவிக்கவோ
வாய்க்கரிசியிடவோ
கொள்ளியிடவோ
கொள்ளியிட்ட இடத்தில்நின்று சிலநேரம் மனதை நினைவுகளில் நீந்தவிடவோ
...............................நேரமற்று
அனைத்திற்கும்,
அவசரம், அவசரம்....
ஏனெனில்,
"Time is Money"
மொத்தத்தில்,
உணர்ச்சிகளற்ற மரக்கட்டைகளாய் வாழ்கிறோம்.
குறிப்பு 3:
இன்று,
மனிதனா வாழ்க்கையை வாழ்கிறான்?
பணம் தான் வாழ்கிறது.
மனிதன் பொருளாகிப்போய்
பலகாலமாகியது...........
அறிவுக்கும் விழியுண்டு
ஆன்மாவுக்கும் விழியுண்டு
விழித்தெழும்காலம்,
உண்மையில்,
நல்மனம்கொண்ட மனிதப்பிறவி
உலகில் உதித்தெழும்காலம்.