ஒப்பில்லா உழவு....!(கவிதைத் திருவிழா போட்டி)

உங்களால்
இந்த
உலகம்
உடம்பு
வளர்த்தது.....

உங்கள்
உதிரத்
துளிகளில்.... இருந்து
உப்புத்
துளிகள்
தெறித்தது.....

உங்கள்
உழைப்பால்
நாம்
ஊன் வளர்த்தோம்....
உடல்
பெருத்தோம்....
உண்மையை
சொல்லப்
போனால்.... நாம்
நோய் வளர்த்தோம்.....

நம்
சமூகம்
தலை நிமிர்ந்து
நின்றது.....உலக
சந்தைவரை
நிமிர்ந்தே
நின்றது.... நிற்கச்
செய்தது
உன்
உழைப்பும்
களைப்பும்
தான்....

உருவாக்கியவனையும்
உரம்
போட்டு
தரமாக்கியவனையும்
மறந்து.....தான்
தானியத்தின்
தரம்....விலை
பேசப்படுகிறது.....

அங்கே
கேள்விகள் உண்டு....விடைகள்
காசுக்கட்டுக்களாக
மந்திர
தந்திரமின்றி
காசுக்காரன்
கைகளில்
அடைக்கலம்
கொள்கிறது.....

வாய்க்கால்
வெளிவந்து
வயல்நிலம்
சேரும்
நீர் போல.... நம்
வாழ்க்கையிலும்
வசதி வந்து
விடாதா என்ற
அங்கலாய்ப்புடன்
சேற்றுக்குள்
கால் புதைத்து
அவன்
வளர்க்கிறான்
பயிர்.....

பிரியப்பட்டு
பயிர்
வளர்க்கிறாய்....நீ
உனக்குத்
தெரிந்தோ
தெரியாமலோ
நாம்
உயிர் வாழ்கிறோம்....

உழைத்தவன்
கை
எல்லாம்
ஒடிந்து
போகிறது.....உட்கார்ந்து
விற்றவன்
கைகளில்
முதல் ஆக
முதலாளியிடம்
மண்டியிடுகிறது.....!

மூட்டை
சுமந்த
நீ முனகியபடி
அடுத்த
போகம்
என்ன
செய்ய என்ற கேள்வியுடன்....

சௌக்கியமாக
நீங்க
இருக்க
எந்த
நாட்டில்
சாத்தியமான
சமாச்சாரம்
உண்டு....?

தொழிலாளர்
தினமென்பது
முதலில்
உனக்குத்தான்.... மற்றைய
தினமெல்லாம்
உனக்குப் பின்புதான்.....!!!

எழுதியவர் : thampu (9-Jun-12, 1:49 am)
பார்வை : 177

மேலே