உன் முகம்..
கடந்து விட்ட என் காலங்களில்
கண்முன் தெரிவதெல்லாம்
உன் முகம்..
மீட்டிப்பார்க்க முடியவில்லை
அத்தனையும் கனவா என..
என் விழிகளில் தோன்றியது
உன் விம்பமெனினும்
என் மனதில் நான்
வரைந்துவிட்டேன் உன்னை ஓவியமாக..
நீ என் கண்களில் இருந்து மறைந்தாலும் என்
இதயத்தில் இருந்து விலகவே முடியாது