நம்காதல் தெரியும் தென்றலுக்கு 555
உயிரே.....
நீ என்னையும் என் காதலையும்
மறந்துவிட்டாய் என
சொல்கிறார்கள் பலர்...
என் காதல் உனக்கு புரியும்
உன் மனம் எனக்கு தெரியும்...
நம்மைத்தவிர யாருக்கு தெரியும்
நம்மளை பற்றி...
நீ மணமுடித்த நாள் முதல்
உன் முகம் நான் காணவில்லை...
உன் குரல் கேட்கவில்லை...
உன் நலம் கேட்பேன்
உன் தோழிகளிடம்...
உன் மழலைக்கு
என் பெயர்வைத்து
அழைகின்றாயாம்...
என் மழலைக்கு உன்
பெயர்வைத்து அழைக்க
நான் மறக்கவில்லை...
பிறந்துவிட்டான்
ஆண்மகனாக...
அழைக்கிறேன் என் மனைவி
இல்லாத நேரத்தில்
என் மனைவியை...
உன் பெயர்சொல்லி...
இனி உன் பெயர்
சொல்லி அழைக்கமாட்டேன்...
என்னை மன்னித்துவிடு...
தென்றல் தினம் என்னிடம்
சொல்கிறது...
உன் குமுறல்களை...
தென்றலுக்கு தெரியும் நம் காதல்.....