இவை ஒருபோதும் தற்கொலைகள் அல்ல.
ஒரு நடிகையின் தற்கொலை...
பற்றிப் படிக்க நேர்ந்தது...
இன்றைய தினசரிகளில்.
சிலுவைகளைச் சுமந்தவள்...
தன கடைசிக் கடிதத்தில்...
எழுதி இருந்தாள்...
எனது இந்தச் சிலுவைகள்...
வேறு யாரையும்
போய்ச் சேராதிருக்கட்டும்...என.
ஊடகங்களும்...செய்திகளும்...
அவளின் தற்கொலையை...
"கண நேரத்தில் எடுத்த முடிவு"..என்றன.
வாழ்ந்திருக்கலாம் அவள் ...என்றன.
இயல்பாய் -
ஒரு விருப்பத்தில்...
அவள் குறித்தான வாழ்க்கை
பற்றிப் படித்தேன்...
வாய் இருந்தவர்களெல்லாம்...
எச்சில் படுத்திய அவளின் வாழ்க்கை...
செய்திகளுக்காகவே...
நிர்வாணப் படுத்தப்பட்ட ...
அவளுக்கேயான தனிமை....
எல்லாம் அறிய நேர்ந்தபோதுதான்...
தோன்றியது...
எப்பொழுதோ...
கொலை செய்யப்பட்டவள்..
அந்தக் கணத்தில்
தற்கொலை செய்து கொண்டாள்...என.