எனதிந்தக் கோடை...
கோடை...
வெறும் பருவம்
இல்லை.
நிறைவேறாக்
கனவுகளின் சூடு.
எல்லா இரவுகளிலும்...
விழித்திருக்கும்
மனிதனின் உருவகம்.
மழைக் காலத்தின்
ஈரம் மறுக்கப்பட்ட
உடலின் பாலை.
எப்போதாவது தெறிக்கும்
கண்களின் நீர்த் துளிகளிலும்..
ஏனோ-
வெப்பம்தான் ....
வாழ்ந்து கொண்டிருக்கிறது.
எனதிந்தப் பருவத்தில்...
எரிந்த வானத்தோடும்...
கருகிய சிறகுகளோடும்..
என்னைக் கடந்து கொண்டிருக்கிறது
எனது பறவையின் கோடை.