அன்னையின் போர்வை
உலகமே போற்றுமென்று நினைத்த
என் மகன் உதையால் போற்றிய போதும்
அவனை உலகம் இழிவாய் போற்றக் கூடாதென்பதற்காக
பைத்தியமென்னும் போர்வையை
போற்றிக் கொண்டு குளிருடன்
உறங்குகிறேன் அவனது
தெருவின் ஓரத்திலே.....