ஜிஷி குட்டி . . . .

கனவினில் சுகம் தந்தாய்
தினம் தினம் இரவினில்...

உன்னை பார்த்திட
என் மனம் ஏங்கும்
வாரத்தில் ஒரு முறையாவது...

என்ன செய்வேன் ???
சூழ்நிலையை கூறி
தப்பிக்க மனமில்லை...

உன்னை காணும் போது
நீ குடுக்கும் முத்தத்திற்காகவே
காத்திருக்கும் என் கன்னங்கள்...

உன் மழலை பேச்சில்
என் மனம் புதைகிறது...

என் பெயரை கூறி
நீ அழைக்கும் போதுதான்
என் பெயரின் பொருளுணர்ந்தேன்...

உன்னை கருவறையில் தொட்ட
அந்த உணர்வு இருக்கிறது
என் கைகளில் இன்னும்...

உன் உடல் முழுவதையும்
கற்பனை செய்துவிட்டேன்
ஒரே நொடியில் "ஸ்பரிசத்தால்"...

உலகத்தில் பிடித்தவர் யார்??
என்று என்னை கேட்டால்
உன் பெயரை அல்லாது
வேறேதை நான் சொல்வேன்...

வலி கொண்டு ஈனறேடுத்தால்
உன் அன்னை...
வலி இல்லாமல் சுமக்கின்றேன்
இன்று உன்னை...

உன் பிஞ்சு கைகள்
என் மேனியை தீண்டும் போது
தாய்மையை உணர்கின்றேன் மனதினில்...

நீ எனக்காகத்தான் பிறந்தாயோ-
என தோன்றுகிறது சில நேரங்களில்...

உன்னை தூக்கிக் கொண்டு
நடைபயணம் செய்ய - என்
கால்கள் தவம் கிடக்கின்றன...

உன் கைகள் பிடித்து நடக்க
என் கைகள் துடிக்கின்றன...

என் தோள்களோ-
நீ தலை சாய்ந்து தூங்குவதற்காக
ஏங்குகிறது...

உன்னுடன் மட்டும் உரையாட
என் இதழ்கள் காத்திருக்கின்றன...

இன்னும் எத்தனை எத்தனை
ஆசைகள் என் சிறிய இதயத்தில்...

சொல்லிட போதாது
காகிதமோ, நேரமோ,...

இது முடிவு அல்ல,
ஆரம்பம்...
இது ஒரு தொடர்கதை...
வானம் சில நேரம் வெலுக்கலாம்,
மலை குட சில நேரம் உடையலாம்,

ஆனால்!!!
என் அன்போ-
என்றும் மாறாதது...
என்றும் மறையாதது...
இனிமேல் வேறவரிடமும்
தோன்றாது உன்னை தவிர...

என் அருமை ஜிஷி குட்டி. . .

( இது எண் அக்கா பையனுக்காக எழுதினேன்.. அவள் அவனை சுமந்த மட்டுமே பெற்றால்.. ஆனால் நானோ அவனை இன்னமும் சுமகின்றேன் என் இதயத்தில்... இனிமேலும் சுமப்பேன் என் உயிர் உள்ளவரை...)

எழுதியவர் : நிஷா Umar (12-Jul-12, 4:40 pm)
பார்வை : 164

மேலே