பரதேசியின் சாபம்

நாட்டுக்கு நல்லது செய்யவே
நானும் ஒரு ஆசிரமம் வைத்தேன்
உலகுக்கே வெளிச்சம் தரவே
உல்லாசயிசம் உருவாக்கினேன்
பொல்லாதவர்கள் உள்ளே புகுந்தனரே
கதவை திறங்கள் காற்று வரட்டுமென்றால்
கதவை பூட்டியதே கர்நாடக அரசு
ஆசிரமும் அந்தோ.....ஆ....சிரமமானதே!

ஆணும பெண்ணும் இணைந்து
காமத்தை கடக்க வேண்டும்
ஆன்மிகத்தில் அது ஒரு அங்கம்
ஆசி வழங்கினேன் கட்டிபிடித்து
ஆபாசம் என்றே அலறுகிறார்கள்

நடிகையுடன் சேர்ந்து நானும்
நள்ளிரவு யோகா செய்தேன்
அதை அந்தரங்க காட்சியென்று
விருந்திட்டதே தொலைக்காட்சி!

கையில் கிடைத்தது அற்புதவிளக்கு
அதை தேய் தேயென்று தேய்த்தேன்
அதிலிருந்து வரும் அற்ப்புத பூதமென்று
வந்ததோ ஆர்த்தியெனும் அவஸ்த்தைபூதம்


தொல்லை தரும் நீதிமன்றங்களை
தொலைத்துக்கட்டவே மதுரையில்
ஆதீனம் ஒன்றை விலைக்கு வாங்கி
அதற்கும் ஆனேன் அதிபதியாக
அதுவும் நஷ்ட்டத்தில் போகிறதே
உலகமெங்கும் கிளைகள் வைத்து
ஆன்மீகத்தை வியாபாரம் செய்தேன்
அதிவேகத்தில் அமெரிக்காவிலிருந்து
அதற்கும் வந்ததே ஆபத்து.அய்யகோ!

இப்படியே நீங்கள் தொல்லைசெய்தால்
இந்த ஆன்மீகத்தை விட்டு போய்விடுவேன்
என் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடையாது
நான் கண்டுபிடித்த நள்ளிரவு யோகாவும்
யாருக்கும் சொல்லித்தரமாட்டேன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (12-Jul-12, 5:22 pm)
பார்வை : 225

மேலே