இந்த நிலைமை ஏன் ?

புத்தகத்தை
கையில் எடுக்க வேண்டிய
நான் - இன்று
குப்பைகளை
கையில் எடுப்பது ஏன் ?

வெற்றி
கோப்பைகளை
கையில் ஏந்த வேண்டிய
நான் - இன்று
வெற்றுக் காகிதங்களை
கையில் ஏந்துவது
ஏன் ?

வாழ்வினில்
மிகவும் கொடுமையான
இந்த வறுமையை
அந்த கடவுள் இளமையில்
விதைத்தது ஏன் ?...

எழுதியவர் : சிவா அலங்காரம் (18-Jul-12, 9:39 am)
சேர்த்தது : சிவா அலங்காரம்
பார்வை : 177

மேலே