இறப்பில்லை நட்புக்கு என்றும் 555

நண்பர்கள்.....

நான் பிறக்கும் போது
நண்பர்களுடன் பிறக்கவில்லை...

நான் இறக்கும் போது
நண்பர்கள் என்னும் நந்தவன
கூட்டத்தில் இருப்பேன்...

நண்பர்கள் யாரும் மீண்டும்
பிறக்க போவதில்லை...

நாம் மீண்டும் பிறப்போம்
நட்பு என்னும் உலகம் இருக்கும் வரை...

கதிரவனும் தினம் மறைந்து எழும்...

சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும்
நாளை மாறும்...

உயிர் கொண்ட நட்புகள்
மாறாதவை என்றும்...

அழிவில்லை ஆழ்கடல்
அலைகள் ஓய்ந்தாலும்...

உலகம் அழிந்தாலும்
நட்புகள் மட்டும் வாழும் என்றும்...

விண்ணில் எதோ ஒரு
ரூபத்தில் நட்பு மட்டும்.....

(என் அன்பு தோழிகளுக்கு சமர்ப்பணம் முதல்பூ)

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (19-Jul-12, 8:44 pm)
பார்வை : 607

மேலே