நிழல் தான் நான

என்னை விட்டு
விலக
நினைத்தாயா?
என்னிலான தவறுகளை
எல்லாம் எண்ணிக்
கொள்!
என்னை வெறுக்க
நினைத்தாயா?
எனக்கான உன்
உறவுகளை எல்லாம்
அழித்துக் கொள்!
என்னில் கோபமுற
நினைத்தாயா?
என்னில் குறைகளை
மட்டும் பார்த்துக்
கொள்!
மறக்க மட்டும்
நினையாதே
என் இரக்கமற்ற
இனியவனே. . .
வேண்டாம் என்றதும்
விட்டு விலகும்
உறவு அல்ல நான்.,
இருளில் கூட
உனக்கே தெரியாமல்
உன்னுடன்
இருக்கும் நிழல்
தான் நான்!

எழுதியவர் : குட்டி ராஜேஷ் (20-Jul-12, 12:33 pm)
சேர்த்தது : Soundaryaa
பார்வை : 174

மேலே