ஆவல்

முத்தான முப்பது நாளும்
உண்ணாது நோன்பு நோற்று
பத்தும் பறக்கும் பசியறிந்து
ஏழ்மை கொஞ்சும்
ஏழைகளின் இன்னல் உணர்ந்து
சீர்கெட்ட நெறியாம்
இச்சை அவா கயமை துறந்து
சீர்கொண்ட நெறியாம்
உண்மையே மொழிந்து
நல்லெண்ணம் நிரம்பிய
மாசில்லா மனதுடன்
மகத்தான ரமலான் மாதத்தை
வாஞ்சையோடு வரவேற்க
வளி மேல் விழி வைத்திருக்கிறேன்
மனமிறங்கி மழலை மதியை
கண்ணில் காட்டிடு மேகமே...!!!!