நினைவுகளோடு நகரும் நிமிடங்களில்..

கண்மணியே..
இது
கண்டவுடன்
வந்த காதல் இல்லை..
நி சொன்ன உடன் மறந்து போக...
நினைவுகளில் ஊறி
நெஞ்சத்தில் ஏறி..
உயிரை உலுக்கி கொண்டிருக்கிறது..,
உன்னை மறக்க வேண்டுமெனில்...???
நான் மறுபடி தான்
பிறக்க வேண்டும்...
நான் ரசித்த
உன் மௌனம்
இப்போது என்னை
உறுத்துகிறது..
ஏங்கிய உன் பேச்சுக்கள்
இப்போது வருத்துகிறது.
நீ பேச்சை நிறுத்திய நிமிடமே,
உடைந்து பொய் விட்டது..
வாழும் எண்ணமும்,
மனதின் திண்ணமும்...
வாழ்கிறேன்..???
உன் நினைவுகளோடு நகரும் நிமிடங்களில்..
ஒரு நரக வாழ்க்கை...

எழுதியவர் : vijivanan (21-Jul-12, 1:56 am)
பார்வை : 433

மேலே