கிரீடக் கவிதைகள்.

இந்தக் கவிதை
உங்களைப் பற்றியதுதான்.

உங்களிடமிருந்தே
எடுக்கப் பட்டதால்
அதில் பொய் இல்லை.

ஒரு அசாதரணமான அழகுடன்
வெகு எளிமையாய் இருந்தது அது.

ஒரு கவர்ச்சிக்காக...
அதில் அனுமதிக்கப் பட்டது
பொய்கள்.

பொய்களின் கலப்பில்...
அலங்காரம் தலைக்கேற...ஏற...
அது ஒரு கடவுளைப் போல
எல்லோரும் தொழுது வணங்க
வீதி உலா வந்தது.

என்றாலும்....
இப்போது அதில்

உயிர்தான் இல்லை.

எழுதியவர் : rameshalam (21-Jul-12, 12:08 pm)
பார்வை : 205

மேலே