தேவை!

காதலியை இழந்தாலும்
காதலை இழக்காத
காதலர்கள் தேவை!

அறிவை தொலைத்தாலும்
அன்பை தொலைக்காத
மனிதர்கள் தேவை!

மாறும் என்று தெரிந்தாலும்
மாற்றம் என்பது தேவை!

வாசிக்கத் தெரிந்தாலும்
நேசிக்கத் தெரிந்த
மனங்கள் தேவை!

இல்லை என்று சொன்னாலும்
இருக்கு என்ற
நம்பிக்கை தேவை!

தேவை என்று தெரிந்தாலும்
தேவை உள்ளவர்க்காய்
விட்டுத் தரும் உள்ளம் தேவை!

உன்னை நீ அறிய
உன்னையே நீ அறியும்
தேடல் தேவை!

மழை என்றால்..
குடை தேவை!
விதை என்றால்..
நிலம் தேவை..
மனிதன் என்றால் ...
மனிதம் தேவை!
வாழ்வதற்கு..
பொருள் தேவை!
வாழ்ந்த பின்னும்..
புகழ் தேவை!

தேவையே..
தேவையாய் போனதால்..

தேவையும்...
தேடலும்
உள்ளவரை
உன்
சேவையும்
இங்கே தேவையே!

எழுதியவர் : ந. ஜெயபாலன்,திருநெல்வேலி-6 (26-Jul-12, 9:08 pm)
பார்வை : 218

மேலே