நட்பு, காதல்
நிலம் சேர மழைத்துளி மறுப்பதேயில்லை.
தென்றலை கானகம் முடிந்துவைப்பதில்லை.
மல்லிகை மணம் பரப்ப துடிப்பதுவுமில்லை.
மன்றம் வந்த தாமரை தவிப்பதில்லை.
தண்ணீருக்கு தடம் பதித்துப்பழக்கமில்லை.
தலைவிவே உனக்கு ஏன் அந்த எண்ணம் வந்ததேயில்லை?
அவிழ்ந்த உயிர் மறுபடியும் ஓட்டுவதில்லையாம்.
ஒட்டி நின்று கலங்கும் காதலியே,
உன்னை வணங்கி நின்ற மனதை உனக்குப்புரியுமா.