...எங்கள் கலாம் ...
வான்புகழ் வள்ளுவன்
வழி வந்த
தமிழின பெட்டகமே ....
சிகரம் பல கண்ட
பொறியியல்
பொக்கிஷமே....
பார்புகழ்
பாரத தாயின்
தவப் புதல்வனே ....
ஏவுகணை பல தந்து
உலகினை
வளம் வந்த
வல்லரசே ..
கடுகளவு அணுவின்
கடலளவு விசையை
மெய்ப்பித்த
இந்தியாவின்
முகவரியே ....
நாளிதழ் விற்று
கல்வி பெற்ற
முயற்சியின்
இலக்கணமே ..
சுய சரிதைகளின்
மைல் கல்லாய்
நின் " அக்னி சிறகுகள் "
தலை மகனின்
மகுடம் சூட
"பாரத ரத்னா"
இலக்கிய நாட்டம் கொண்டு
படைப்புலகிலும்
தடம் பதித்த
அறிவியல் அற்புதமே ....
பதினோராம்
குடியரசே......
பார் போற்றும்
புகழ் அரசே ....
அறிஞர் அண்ணாவின்
பல்கலையில்
ஆசானாய் பரிணமிக்கும்
அனுபவ கதிரோனே !
அயராது உழைத்து
நீ கொண்ட புகழனைத்தும்
எங்கள் நெஞ்சு நிறை
இறுமாப்பு .....
கல்வி சாலைகட்கு
நின் வருகை ...
பிஞ்சு உள்ளங்கட்கோ
பேருவகை ..
எளிமையின் அணிகலனே....
தனித்துவத்தின் அடையாளமே ...
" இந்தியா 2020"
நின் கனவு !
சபதமேற்ப்போம் ...
சாதிப்போம் !!!!!