அண்டப்புளுகன்.

முன்பொருநாள் கண்ட அதேபோலிவுடன் ஊர் .
மேடை ,தோரணம் ,கொடியென
இம்முறையும் தெருத்தெருவாய்
மலிந்துகிடந்தது அவனது பெயர் .

வான் பிளக்கும் பட்டாசு வெடிகள்,
அண்ணாவியர்களின் பொல்லடி ,
பாவாக்களின் ரப்பான்மேளம்,
பொண்டுகள் குலவையென
நாட்டின் பெரும் தியாகியைப்போல்
வரவழைக்கப்பட்டான்.

விளம்பரப்பலகைபோல் முன்வரிசையில்,
ஊரின் முதிர்ந்த முகங்கள்
களைகட்டியிருந்தது மேடை
பேச ஆரம்பித்தசிலர்
எழேட்டுப்பேரை கழுகி குடித்தனர்.
அந்த பகுதியில் அடித்த காற்றில்
ஒரு சாதி விஷ செடிநாத்தம்.
சுவாசிக்க முடியாமலிருந்தது.

இப்போது அவன் முறை
கரகோசத்தோடு பேச எழுந்தான்
“மாயாஜால” காறர்களின் வித்தைகள்சில தெரியுமவனுக்கு
உலகமகா பொய்களை
சாக்கு,சாக்காய்அவிழ்த்து விட்டான்
மேடையிலிருந்து இறங்கி
தொண்டர்களின் காதுகளிலேறி உட்காரும்படி ஏவி.
எதை விளங்கினார்களோ தெரியவில்லை
கை தட்டிக்கொண்டிருந்தார்கள்
போனமுறயைப்போல்.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (2-Aug-12, 10:19 pm)
சேர்த்தது : Rozhan A.jiffry
பார்வை : 186

மேலே