என் இன்பம் நீ....
கருவிலே
உருவெடுத்த
கவிமகன்
நீயோ..
கலைமகள்
கவிபடைக்க
காரணியும்
நீயோ..
மூச்சிலே
முளைத்திட்ட
முதல் பூவும்
நீயோ…
பேச்சிலே
பிறந்துவரும்
பேரீன்பம்
நீயோ..
தங்கத்தில்
வடித்தெடுத்த
தவப்புதல்வன்
நீயோ..
அங்கமெல்லலாம்
அழகொழுக
அரும்புதல்வன்
நீயோ..
ஏழேழு ஜென்மங்களும்
எனையாளும்
தேவனும்
நீயோ..
வாழுகின்ற
காலமெல்லாம்
வாழ்த்துகின்ற
வசந்தமும்
நீயோ…