நான் கடவுளோடு பேசுகிறேன்.

சித்திரை மாதம் மட்ட மதியம் கருவேலங்கட்டின் நடுவே -ஆண்டவன் தந்த அழகின் மறுபுறத்தில் ஒற்றை அடி பாதையில் நடந்து சென்று கொண்டு இருக்கையில் ஓர் மூதாட்டியை தலைச்சுமை முற்க்களோடு கண்டேன்.. தூரத்தே.

அவள் தளரக் கண்டேன் .. அவள் விழக் கண்டேன்.
ஓடிச் சென்றேன் அவளை நோக்கி மயங்கி இருந்தாள்..

உசுப்பி விட்டேன் அவளை நோக்கி எழுந்திரு தாயே எழுந்திரு என்றேன்..

சலனமில்லா முகம்கண்டேன் சலனம் கொண்டேன்?!..
ஓடிச் சென்றேன் தண்ணீர்த் தேடி... சென்ற இடமெல்லாம் கதிரவன் தந்த கனல்நீரே?!..

ஓடிச் சென்றேன் அவளை நோக்கி பாவம் ஐயோ அவள் பாவம் என்று...

அவள் விழித்திருந்தாள்? நான் ஆச்சரியம் கொண்டேன்!.. அவள் முகத்திள் நீர்த் துழிகள்!! நான்
கேள்வி உற்றேன்?

அருகே ஓர்ச் சிறுமி.
ஏது பெண்ணே ஏது உனக்கு நீர் என்றேன்?!.

அவள் உரைக்கச் சொன்னாள் அது தண்ணீர் அல்ல எந்தன் "மூத்திரம்" என்று.

நான் கடவுளோடு பேசுகிறேன்.

எழுதியவர் : கார்த்தி பெரியசாமி (11-Aug-12, 7:51 pm)
சேர்த்தது : Karthy.P
பார்வை : 175

மேலே