நண்பர்களுக்கு...
முதன் முதலாய் ஒரு கவிதை
என் கூட்டத்திற்கு...
எல்லை கோடுகள் கிடையாது,
பிள்ளை செண்டைகள் குறையாது...
விட்டுகொடுக்கும் வித்தை தெரிந்ததால்,
வேறுபட்ட கொள்கையிலும்
ஒட்டிக்கொண்டு நடக்கிறோம்...
முஸ்தபா பாடலை பாடியதில்லை,
பிரியமான தோழியை தேடியதில்லை...
தழலாக எரியும் எங்கள் நட்பில்,
தண்ணீரை ஊற்றாதே இறைவா!!!
நினைத்துக்கூட பார்க்கதே,
உன்னாலும் அது முடியாதல்லவா...
உதிர்ந்து போக நாங்கள்
உதிரிபூக்கள் இல்லை...
கலைந்துபோக (காற்றடித்தால்).
வெண்மேகமும் இல்லை...
தொலைவிலே இருந்தாலும்
துடித்திடும் மான்கள்...
ஒன்றாக வாழ துடிக்கும்
ஒருகூட்டு தேன்கள்...
ஒன்றுகூடினால் மின்னல்
பல ஒய்யாரமாய் ஒளிக்கும்!!!***
ஓயாமல் இடிமுழக்கம்
ஊர்முழுதும் ஒலிக்கும்...***
To My Team "THE BUENOS "...

