என் தோழிக்கு...

சிறுபிள்ளை இவள் பேச்சு,
ரசிக்கும்படி பேசுவாள்...
சிறுதவறு செய்தால் கூட,
தாறுமாறாக சாத்துவாள்...
ஏசுவின் வாழ்வைப்பற்றி அருமையாக பேசுவாள்,
ஏனோ... தெரியவில்லை...
என்நண்பன் பேசினாலோ பலமொழியில் ஏசுவாள்...
நாய்களுக்கும் மதிப்புதந்து நன்றிபல சொல்வாள்,
தன் நெஞ்சம் சொல்கேட்டு நீண்ட வழி செல்வாள்...
வாழையிலை நெற்றியிலே,
வட்ட போட்டு வெய்ப்பாள்...
கட்டழுகு (பொய்) மேனியையோ,
கவனமாக காப்பாள்...
உரிமையோடு உதைகள் பல
உருட்டுகட்டையில் தருவாள்,
உப்புசப்பில்லாத விசயதிற்கோ
ஒரு நிமிட கோபம் கொள்வாள்...
இவள் பாதம் வாசல் தொட்டால்,
வீடு முழுதும் வசந்தம் வீசும்...
இவள் மேனி தொடும் காற்றோ,
தித்திக்கும் பாஷை பேசும்...
என்ன தான் சொன்னாலும்...!!!
சத்தமில்லாமல் சிரிக்க
நிச்சயமாய் இவளுக்கு தெரியாது,
என் நண்பனின் சைகை மொழியெல்லாம்
இவள் கண்கள் அறியாது...