புலியாய் புறப்படு

அடர்ந்த காடு
அதில் ஓடும் பால் நதி
நதி தேடி ஓடி வரும் மான்கள்

நதிகரையில் அப்போது
நரி ஒன்றும் காத்திருக்கும்
காத்திருந்த நரி
மானை துரத்த
துள்ளி ஓடும் புள்ளிமான்கள்
உயிர் பிழைக்க
ஓடும் புள்ளிமானின் ஒரு
குட்டி அகப்பட்டது
நரியின் வாயில்

மான்களின் ஓட்டம்
தடை பட்டது
மருண்டு பார்க்கிறது
காப்பாற்ற யார் வருவார்
கானகத்தில் ?

அப்போது
பாய்ந்து வந்தது புலி ஓன்று
நரியை கவ்வியது
மான் குட்டி தப்பியது இப்போ
குள்ளநரி புலிவாயில் !

ஆயிரம் குள்ளநரி
நாட்டில் உண்டு நண்பா !
புலியாய் புறப்படு
நரிக்கூட்டம்
ஒழியட்டும்
நல்லவர்கள்
வாழட்டும் !

எழுதியவர் : (17-Aug-12, 3:31 pm)
சேர்த்தது : m arun
பார்வை : 233

மேலே