ஆண்டவன் என் மனசில் இல்லை.....!
கோவிலுக்குள் செல்லுமுன்
கழட்டினேன் செருப்பை
மனசுக்குள் இருக்கும் தீயகுணம்
கழட்ட நான் தோற்றேன்....
விழியிலே இறை சிலை தெரிய
அகத்திலே இருள் விலக வில்லை...
அறிந்தேன் எனது தவறு
ஆண்டவன் என் மனசில் இல்லை.....!
ஆலயமாய் இனி அன்பை கட்டத் தொடங்கினேன்..!