வந்து விடு... !!

சிநேகிதி என்று
அழைக்கச்சொன்னாய்...
என்னே அதன் பொருளென -நான்
சிந்திக்கும் முன்னே
நிதியாக அள்ளித்தந்தாய்
சிநேகத்தை
குறைத்துத்தான் மதிப்பிட்டு விட்டேன்
அன்பை...
அள்ளிக்குடித்த பின்தான்
தெரிந்துகொண்டேன்
குடமல்ல -உன் மனம்
நீருற்று என்பதை
விழிகசித்து -நீ
விளையாடும் பொழுதுகளிலெல்லாம்
மனது மரணித்து
மறுபடியும் பிறக்கிறது மழலையாக
மனதே
மரித்துப்போன ஒருத்தியிடம் - நான்
மரணதண்டனைக்கைதியாகி போன வேளை
மனுவெழுதி
மறுபிறப்பித்தவளே
வருக ...வருக ...
என்
இதயத்தை
தூசுதட்டி
தூய்மையாக்கிவிட்டேன்
ஊனமாகிப்போன மனதில்
ஊக்கமருந்து தெளித்தவளே...
கறைபடிந்துபோன கனவுகளுடனே
கட்டுண்டு கிடந்த என்னை
நிசப்பதம் கலைத்து
நிஜ உலகு காட்டியவளே..
வந்து விடு
முழுதாக...
நான்கு அறைகள்தான்
இதயத்தில் அதிலும் சிற்சில
சிதிலமடைந்து புனருத்தானம்
செய்யப்பட்டவைதான்
ஆனாலும் அன்புகளும்
அரவணைப்புகளும் கனத்துக்கிடக்கிறது...
வந்து விடு...
உனதன்பை தந்துவிடு...