படித்தவள்
அவள் சங்கீதம் படிக்கவில்லை.,
ஆனால்
அவள் தாலாட்டை விட சிறந்த சங்கீதம் நான் கேட்டதில்லை ...
அவள் சமையல் படிக்கவில்லை...
ஆனால்
குடும்பமே இன்பமாய் பசியாருகிறது அவள் சமைத்ததை உண்டு....
அவள் ஓவியக்கலை படிக்கவில்லை .,
ஆனால்
தெருவே வியக்கிறது அவள் போடும் கோலம் கண்டு....
அவள் கணிதமும் படிக்கவில்லை
ஆனால்
அவள் தான் குடும்பத்தின் நிதி மந்திரி மாதம் ஒரு முறை பட்ஜெட் போடுகிறாள் ...
அவள் படிக்கவில்லை
ஆனால் என்னை படிக்கவைத்தாள்...
அவள் பாட புத்தகங்கள் படிக்கவில்லை
ஆனால் வாழ்க்கையை படித்தாள்...
அதனால் அவள் தான்
அதிகம்
"படித்தவள்"