[317 ] நாம் ஏன் மூழ்கிப் போனோம்?
வத்திபெட்டி
பத்திக்கிச்சுடா!--மீண்டும் ஒரு
அத்திப்பட்டி
காண வில்லைடா!
சுத்தி எங்கும்
ஊழல் ஆட்சிடா!-மிளகாய்
தூவிச் செல்வோர்
இங்கு யாரடா?
சுத்திச் சுத்திப்
போலீஸ் நாய்போல் -மக்கள்கதை
சொல்லிச் சொல்லி
நீயும் பாடடா!
போலீசுக்கே
இந்தப் பாடுடா!- இனிமேல்
போயும் நீயும்
எங்கே பாடடா?
எந்தத் தண்ணி
ஊத்துனாங்கடா ?-அத்திப்பட்டி
என்றே நாமேன்
மூழ்கிப் போனோம்டா ?
வத்திப் பெட்டி
பத்திக் கிச்சுடா!-மீண்டும் ஒரு
அத்திப்பட்டி
காணவில்லைடா!
-௦-