மாமன் மகள்!...

உன்னைப் பார்த்தால் உள்ளே ஓர் பரவசம்! - நீ

என்னைப் பார்த்தால் உள்ளே ஓர் நவரசம்!

தினமும் உன்னை பார்கமாட்டோமா?...

தினமும் உன்னிடம் பேசமாட்டோமா?...

என் மனம் ஏங்குகிறது!...

உலகில் ஆயிரம் அழகிகள் இருந்தாலும்-என்

உலகில் நீ ஒருத்தி தான் என்றுமே அழகி!

உன்னைப் பார்க்கும் போது வரும் மகிழ்ச்சியை

வார்த்தைகளால் கூற முடியாது!

என் உள்ளத்தில் உன்னை செதுக்கியிருக்கிறேன்!

என் நினைவில் உன்னை பதித்திருக்கிறேன்!

என் மனதில் நான் பதிவு செய்திருக்கும் அழியாத

கோலம் நீ!

நாம் சிறு வயதில் பழகிய நாட்களை என் மனம்

அசைபோடுகிறது!

மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத நாட்கள்!

உன்னையே நினைத்திருக்கும் என்னை நீ

என்றாவது நினைதிருப்பாயா?...-நிச்சயம்

நினைத்திருப்பாய்! கனவிலாவது கண்டிருப்பாய்!

என்றும் உன் நினைவுடன் வாழும்,

உன் அத்தான்!....

எழுதியவர் : ர.சுதர்சன். (5-Sep-12, 11:43 am)
சேர்த்தது : R.sudharsan
பார்வை : 864

மேலே