என் தந்தைக்கு சமர்ப்பணம் !

என்னை வரமாக
கொடுத்த அம்மாவுக்கு
பூவையும் பொட்டையும்
பறித்துக் கொண்டாயே கடவுளே ...

என் தந்தை
என்னைக் கண்டு ஆனந்த கண்ணீரோடு
கொடுத்த முத்தத்தின் ஈரம் காயவில்லை ...

என் மழலை அழுகையோடு
என் தந்தையை காக்க
உந்தன் காலடியில் சரணடைந்தேனே
இரக்கமில்லா கடவுளே
என் தந்தையே காலனிடம் சேர்த்தாயே ...

கடவுளே
காலனின் தாகம் தீர்க்க விட்டாயே
பாலகனின் கதறல் கேட்கவில்லையா
என் தந்தையின் சிரத்தை பறித்து கொண்ட
கடவுளே உன் மனதில் ஈரம் இல்லையா !

தந்தையின் பாசம் இல்லாத
சிறையில் வாழ்ந்து வருகிறேன்
கடவுள் அடைத்துள்ள
கல்லறை சிறையில் வணங்கி வருகிறேன்
என் மனதில் வாழ்ந்து வரும் தந்தையை...


குறிப்பு : இந்த கவிதையை என் தந்தை திரு.இரா.தூண்டியாப்பிள்ளை க்கு சமர்ப்பணம் செய்கிறேன் . இன்று அவர் நினைவு நாள்
மறைவு 5.09.2003

எழுதியவர் : தூ.சிவபாலன்,கட்டுமாவடி (5-Sep-12, 11:48 am)
பார்வை : 904

மேலே