காதல் தோல்வி (வெற்றி)
![](https://eluthu.com/images/loading.gif)
என்னை அறியாமல் என்னுள்
நான் வளர்த்த காதல் ...!
நான் அறிந்து அவளிடம் கூறும் தருணம்
இறந்து போனது காதல்...!
இறந்தது அவள் என்மேல்
வைக்க மறந்த காதல்...!
நான் அவள் மேல்
வைத்த காதல் அல்ல...!
அவளை எண்ணி ....
என்னுள் நான் எழுதிய வார்த்தைகள் ...!
என்னுள் எழும்பிய கனவுகள் ...!
என்னுள் உதித்த அவளின் நினைவுகள்...!
என்னுள் அவள் ஏற்படுத்திய வலிகள்...!
என
அவளின் சுவடுகள் அனைத்தும் என்றும்
என்னுள் மறையா வண்ணம் நிலைதிருகிறது
காதலாக ....!!!!!